ஆர்.கே.பேட்டை, நவ. 9 –

ஆர்.கே.பேட்டையில் வனிக வளாகம் முன் சுகாதார கேடு விளைவிக்கும் வகையிலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் குவிந்துக் கிடந்த குப்பைகளால் துற்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவி வந்தததை, நமது தம்பட்டம் நாளேட்டில் செய்தி மூலம் நேற்று உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதின் விளைவாக, இன்று அப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு ஏற்பட்டது.

இன்று அந்த வளாகத்தின் முன் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, கொசு தடுப்பு மற்றும் நோய் தொற்று தடுப்பு மருந்துகளை தெளித்து உடனடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும், அப்பகுதி மக்களும் தினசரி அவ்வளாகத்தில் அமைந்திருக்கும் வங்கி மற்றும் ஏ.டி.எம். மிற்கு நூற்றுக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் அவ் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களுக்கு தம்பட்டம் நாளேடும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கீழே நேற்றைய செய்திக்கான லிங்க் ..

https://thampattam.in/rk-pattai-garbage-piled-up-in-front-of-the-shopping-mall-unseen-by-the-local-administration/

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here