கும்பகோணம், நவ. 9 –

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மண்ணியாற்றில் தனியார் பேரூந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில், கும்பகோணத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து, திருப்பனந்தாள் அருகே உள்ள பட்டம் பகுதி அடுத்த மண்ணியாற்றின் பாலத்தின் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இந்த விபத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பேருந்தில் பயணம் செய்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் இது தொடர்பாக  தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றி வேந்தன், ஆய்வாளர் முத்துக்குமார் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அரசு தலைமை கொறடா கோவை செழியன் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத்தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து உதவி செய்த பொதுமக்களிடம் நன்றி தெரிவித்தனர். விபத்தின் பதட்டத்தில் இருந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மேலும் இவ் விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here