கும்பகோணம், மே. 25 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் நகர் எனும் இடத்தில், ஐந்து பேர் வந்த இரு சக்கர வாகனமும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் நண்பர்கள் பேருந்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த சோழன் மாளிகையில், கும்பகோணத்தில் இருந்து ஆவூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே பைக்கில் வந்த அமர்நாத், இளங்கோவன், வாசுதேவன், ஹரீஸ் மற்றும் பவித்திரன் ஆகிய 5 இளைஞர்களும் படுகாயம் அடைந்தனர்.
அதனைக்கண்ட அவர்களின் நண்பர்கள் அப்பேருந்தின், முன்புறம் மற்றும் பின்புறம் இருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். தொடர்ந்து, பேருந்துக்குள் சென்று இருக்கைகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் அடிபட்ட 5 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, 108 ஆம்புலவன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்விபத்துக் குறித்து தகவலயறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டீஸ்வரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்துக்கு பின்பு, பேருந்தை ஒட்டி வந்த ஓட்டுநரும் நடத்துனரும் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. பேருந்தை சேதபடுத்திய இளைஞர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.