ஆவடி, மே. 08 –

ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் அமைந்து உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் இன்று காலை மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், தேன், நெய் ஆகிய அபிஷேக திரவியங்களை வழங்கினார்கள்.

இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் ஏற்கனவே நடைப்பெற்ற நிலையில் அதனைத்தொடர்ந்து பதித பாவன சக்கரம் பிரதிஷ்டை செய்து 48 நாள் மண்டல பூஜை நடைப்பெற்று வந்த நிலையில் இன்று நிறைவுப்பெற்றது.

முன்னதாக இன்று காலை அஷ்டபந்தனம் சாற்றுதல், பகவத் ப்ராத்தனை    ( அனுக்ஞை ) எஜமான சங்கல்பம், விஸ்வகேஷ்ண ஆராதனம், புண்யாகவாசனம், ம்ருத்சங்க்ரஹம், சோம கும்ப மஹா கும்பஸ்தாபனம், பாலிகா ஆராதனம்,வேத,திவ்ய ப்ரபந்த பாராயணம்,பஞ்சஸூக்த ஹோமம், முக்ய மந்த்ர, மூலமந்த்ர, மஹாமந்த்ர ஹோமம், பூர்ணஹூதி, கௌர நிதாய் ப்ராண ப்ரதிஷ்டை, ஆராதனம், மஹா தீபாராதனை, தீர்த்த ப்ரசாத விநியோகம்,நயனோன்மீளனம், ( கண்திறப்பு ) பிம்பஸூத்தி திரமஞ்சனம்     ( 81 கலசம் வைத்து ) புஷ்ப அலங்காரதரிசனம், விசேஷ திருவாராதனம்    ( பூஜை ) மஹாதீபாரதனை, தீர்த்த ப்ரசாத விநியோகம், முடிந்து கௌர நிதாய் புறப்பாடு நடைப்பெற்று நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆவடி ஹரே கிருஷ்ணா திருக்கோயில் தலைவர் இ.சரவணன் மற்றும் ஹரே கிருஷ்ணா சேவா டிரஸ்ட் ஆலய நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here