மீஞ்சூர், அக். 03 –

தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக அத்திப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் மற்றும் துணை தலைவர் எம் டி ஜி கதிர்வேல் தலைமையில் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 546 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க ரகுரவிக்குமார் வேண்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுப்போன்று கல்பாக்கம் ஊராட்சியில் பிரியங்கா துரைராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் குடி தண்ணீர். சாலை வேண்டி. பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் ஓய்வூதியம் வேண்டி புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காணியம்பாக்கம் ஊராட்சியில் கா.சு.ஜெகதீசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சியில் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். .

மெரட்டூர் ஊராட்சியில் மேரிரகுபதி தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில், புதிய சாலைகளை சீரமைக்க வேண்டியும், குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டியும் மற்றும் மின்விளக்குகள் உள்ளிட்ட முக்கிய தேவைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர்கள் ஹரிகிருஷ்ணன். ஆறுமுகம். பொற்கொடி முருகானந்தம். உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here