கும்பகோணம், டிச. 01 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சியில் மத்திய ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் தனாயார் மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  அரசு தலைமை கொறடா கோவி செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன் துணை பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை ஆடுதுறை பேரூராட்சி செயலாளர் கோசி இளங்கோவன் உயர்மட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் ஒன்றிய செயலாளர்கள் உதயசந்திரன் மிசா மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது, அனைத்துத் துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவும், மேலும், பொருளாதாரக் குறியீடுகளைக் கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய எண்ணம் என்றும்,

தொடர்ந்து கிராமப்புறப் பிரச்சினைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், அதற்கு மேக்ரோ அளவிலான நன்மைகளைச் செய்து தர வேண்டும் நமது தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளராக உதயச்சந்திரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதிகள் அறிவித்த கழக தலைவர் பொதுச் செயலாளர் தலைமை கழக நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்தது இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுத்து அறிவித்த கழக தலைவருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது

வாக்குச்சாவடி முகவர் BLA-2 மற்றும் பூத்து கமிட்டியில் ஊராட்சி தோறும் நியமனம் செய்வது என்பது போன்றவைகள் இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here