காஞ்சிபுரம், அக். 19 –
காஞ்சிபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனராக உள்ள டாக்டர் பழனியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல். மேலும் அவரது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பாதுகாப்பு அறையின் சாவியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையிலுள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்தி 2 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


















