திருவள்ளூர், ஏப். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்  சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில்  புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால்.தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

இன்னும்  தேர்தலுக்கு ஒன்பதே நாட்கள் இருக்கும் நிலையில் நேற்றைய தினம் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது திருவள்ளுர் அடுத்த  கல்யாணகுப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுடன் குஜராத்தின் சமூக போராளியும் காங்கிரஸின் மாநில செயல் தலைவரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி அவருடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார் அப்போது அவரை சசிகாந்த் செந்தில் கிராம மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் ஜிக்னேஷ் மேவானிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து சால்வை அணிவித்து மாலை அணிவித்து கை குலுக்கி அவரை வரவேற்றனர். பின்னார் அவர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக ஜிக்னேஷ் மேவாணி பிரச்சாரம் மேற்கொண்டது தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here