தஞ்சாவூர், மார்ச். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சை அருகே சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த 724  கிலோ குட்கா, பான் மசாலா,  உள்ளிட்ட பொருட்களுடன் அதைக் கடத்தி வந்த சரக்கு வேணுடன் ( 3) பேரை கைது செய்து காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த வெண்ணாறு பாலத்தில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்துள்ளனர். அப்போது சட்டத்துக்கு விரோதமாக (32) கிலோ ஹான்ஸ் பான் மசாலா போதைப் பொருட்கள்  மற்றும் 26, ஆயிரம் ரூபாய் பணமும் ஆம்னி  வேனையும் பறிமுதல் செய்த போலீசார் நடுக்காவேரி ஊரை சேர்ந்த காளிராஜன் என்பவரையும் கைது செய்தனர்.

அதே போன்று திருவையாறு அடுத்த நடுக்காவேரி மேல தெருவில் உள்ள செந்தில்குமார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 402 கிலோ குட்கா, பான் மசாலா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் டாட்டா ஏசி வாகனத்தில் வைத்திருந்த விற்பனைத் தொகை ரூ.3,68,540 பணமும் பறிமுதல் செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.

மேலும் அதுப்போன்று அய்யம்பேட்டை செல்வகுமார் என்பவரிடம் 290 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமாரையும் கைது செய்தனர். மேலும் சட்டத்திற்கு  விரோதமாக செயல்பட்ட அம்மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அடுத்தடுத்து (3) இடங்களில் குட்கா போதை பொருட்கள் சிக்கியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here