திருவாரூர், மார்ச். 29 –  

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன்… இவர் அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனது விவசாய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளார்.

இதனை அடுத்து மகேந்திரன் வழக்கம் போல தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது, குடவாசல் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை மற்றும்  காவல்துறையினர்  ஜேசிபி இயந்திரத்துடன் அங்கு வந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி மகேந்திரன், அதுக்குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டதாகவும் அதற்கு அரிகாரிகள் உங்களது விவசாய நிலத்தில் பாசனத்திற்காக வாய்க்கால் அமைக்க உத்தரவு இருப்பதாகவும், அதற்காக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பணியை துவக்குவதற்கு தாங்கள் இங்கு வந்துள்ளோம் என அப்போது அவரிடம்  தெரித்ததாக விவசாயி மகேந்திரன் நம்மிடம் தகவல் தெரிவிக்கிறார்.

மேலும் அப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கும் விவசாயி மகேந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது விவசாயி மகேந்திரன் தனக்கு எவ்வித முன்னறிவிப்பும் அறிவிக்காமல் திடீரென அரசு அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது சரியில்லை எனவும், மேலும் தற்போது வயலில் பயிடிப்பட்டு 40 நாட்கள் வளந்துள்ள பருத்திப் பயிர் குறித்தும் அவர்களிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கிறார். மேலும் விளைச்சலுக்கு பின் இப்பணியை நீங்கள் மேற்கொள்ளுங்கள் என்றவாறும் கோரிக்கை விடுத்ததாகவும், அவற்றையெல்லாம் கேட்டும் கேட்காதவாறு அவ்வதிகாரிகள் போலீசார் துணையுடன் வாய்க்கால் அமைக்கும் பணியினை மேற்கொண்டனர்.

இதனைப் பார்த்து 40 நாள் வளர்ந்த  பயிர் எல்லாம் வீணாகிறதே என்றவாறு விவசாயி கதறினார். அதனையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் வாய்க்கால் அமைக்கும் பணியினை மேற்கொண்டது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

மேலும், இது குறித்து விவசாயி மகேந்திரன் கூறுகையில்….

இந்த வாய்க்கால் இப்போது அமைப்பதின் அவசியம் என்ன அப்படி அமைத்தால் நான் பருத்தி சாகுபடி செய்து கொள்கிறேன் அதன்பிறகு வந்து வாய்க்கால் வெட்டுங்கள் என கூறியதாகவும், யாரோ ஒரு தனிநபருக்காக அரசு அதிகாரிகள் செயல்படுவதாகவும் நாங்கள் எவ்வளவோ கூறியும் அதற்கு செவி சாய்க்காமல் அதிகாரிகள் இப்போதே நாங்கள் வெட்ட வேண்டும் என்றும் கூறி 40 நாள் வளர்ந்த பயிர் என்று கூட பாராமல் பயிர்களை சேதப்படுத்தி.. தற்போது இந்த வாய்க்காலை வெட்டி வருகின்றனர்..” என வேதனை தெரிவித்தார்..

அரசு அதிகாரிகளே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

பேட்டிகள்:

  1. மகேந்திரன்-
  2. ஜெயப்பிரியா –

விவசாயிகள், கடலங்குடி,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here