திருப்பாலைவனம், மார்ச். 29 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பாலைவனம் ஊராட்சியாகும் இவ்வூராட்சிப்பகுதியில் உள்ள காஞ்சவாய மேடு கிராமப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில். அதற்கான புதிய போர் அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அப்பணிகள் திடீரென நிறுத்தப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேறு இடத்தில் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றன. இதனை அறிந்த கிராமத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாவட்டச் செயலாளர் பாலமுருகனிடம் இதுக்குறித்து தெரிவித்தனர் தகவலறிந்து அங்கு விரைந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் . முன்னிலையில் இன்று அந்தப்பகுதியை ஆய்வுசெய்து. கிராம மக்களிடம்  குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது கிராமத்தினர் கூறுகையில். எங்களுடைய கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். மேலும் இப்பகுதியில் அமைக்கப்படும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகிலேயே மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்தால் மிக எளிதில்  அனைவருக்கும் குடிதண்ணீர் கிடைத்துவிடும். இந்த இடத்திலிருந்து இத்திட்டத்தினை  மாற்ற வேண்டாம் என்றுஅப்போது அவர்கள் தெரிவித்தனர்.

அதனைக் கேட்டுடறிந்த அவர்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து இது குறித்து ஆவணம் செய்வதாக உறுதியளித்தனர். இதில் நிர்வாகிகள் சந்திரமௌலி. சித்ரா அனிதா. சத்தியநாராயணன் சுரேந்தர். புருஷோத்தமன் கோட்டி. சரத்குமார். கலைவாணி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். மேலும் இந்நிகழ்வுக்குறித்து அரசல்புரசலாக அப்பகுதியை சார்ந்த சிலர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களையும் எதிர்கட்சியினரையும் இப்பிரச்சினைக் குறித்து அனுகாமல் தமிழ்நாட்டில் ஆளில்லா கட்சி எனும் அவ்விருக் கட்சியினரால் கூறப்படும் பாஜக நிர்வாகியை அணுகி கிராமமக்கள்  அதிலும் பழங்குடியின மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முறையிடுவது வியப்பாக உள்ளதாகவும், மேலும் ஆளும் கட்சியினருக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்திவுள்ளதோ எனக் கேள்வி அவர்கள்எழுப்பிய கேள்விகள் நமது செவிகளை துளைத்துச் சென்று என்ன பயன் …. என்றவாறு அங்கிருந்து கிளம்பினோம் …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here