மீஞ்சூர், ஜூன். 26 –

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம். என். கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை அவ்வார்டு உறுப்பினர் அபுபக்கர் ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் கோபி நயினார், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ,துணை தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் பேரூர் திமுக மு.ந செயலாளர் மோகன்ராஜ், கம்யுனிஸ்ட் கட்சி மாவட்ட கமிட்டி நிர்வாகி கதிர்வேல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வாசு (எ) வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இம்முகாமினை தொடங்கி வைத்தார்கள்.

இதில் ஜெகன் நகர் பள்ளிவாசல் நிர்வாகி ஹாஜி ,சாதிக்பாஷா ,எஸ்டிபிஐ மீஞ்சூர் நகர செயலாளர் அன்சாரி, இந்திய கிருஸ்துவ வாலிபர் சங்க தலைவர் குருசாலமோன், திமுக கிளை நிர்வாகிள் சாதிக், சாகுல், விசிக நிர்வாகிகள் அப்துல்லா, பஷிர், காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிள் ஹாஜி, சாதிக் பாஷா,காஜா மொய்தின், நியாஸ் ஜாக்கிர் உசைன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் இம்முகாமில் கிட்டப்பார்வை ,தூரப்பார்வை, கண்புறை, கண்சதை வளர்ச்சி, கண்எரிச்சல் உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் 50 க்கும் மருத்துவ பயனாளிகள் மருத்துவ சிகிச்சைப் பெற்று பலனடைந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here