திருவள்ளூர்; நவ.15-
2019 – ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு படை வீர்ர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள், உடல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு தொடர்பாக 06.11.2019 முதல் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த உடல்தகுதி தேர்வுகள் சில நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 09.11.2019-ம் தேதி உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் 18.11.2019-ம் தேதி காலை 5.00 மணிக்கும், 11.11.2019 ம் தேதி உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் 19.11.2019-ம் தேதி காலை 05.00 மணிக்கும் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் ஆஜராகிடுமாறு சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.