மீஞ்சூர், டிச. 31-

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை பகுதியில் அமைந்துள்ளது. ஜெர்மன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஏஜென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம். அதில்,  கண்டெய்னர் பெட்டகங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் பணி நடைப்பெறுகிறது.

அந்நிறுவனத்தில் மொத்தம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் நிரந்தர தொழிலாளர்களாக அங்குப் பணி புரிந்து வரும் 40 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையிலும் உரிய நிவராணம் வழங்கிடக்கோரியும் அவ்வூழியர்கள் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தொழிற்சாலையின் வளாகத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் அவ்வார்ப்பாட்டம் குறித்து அவ்வூழியர்கள் கூறுகையில் நாங்கள் இந்த தொழிற்சாலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகவும், தற்போது இத்தொழிற்சாலையை  மூடப்போவதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், எங்களை பணி நீக்கம் செய்து கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி அதற்கான இழப்பீடு தொகையாக பணியாளர்களின் பணி மற்றும் பணிகாலத்திற்கு ஏற்ப பத்து இலட்சம் முதல்15 இலட்சம் வரை வழங்கப்பட உள்ளதாகவும் விரைவில் வீடதேடி அதற்கான கடிதம் மற்றும் காசோலை வந்து சேரும் என நிர்வாகத்தினர் கூறி எங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்நிறுவனம் அவர்கள் தெரிவித்த தொகையினை வழங்காமல் ஆளுக்கு ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் மட்டுமே வழங்கி உள்ளனர்.

அதுக் குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வளவுதான் கொடுக்க முடியும் என கைவிரித்ததாகவும் 17  ஆண்டுகளாக அக் கம்பெனிக்காக பணியாற்றிய எங்களுக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் இந்நிலையில் தங்கள் குடும்பத்தை வழி நடத்தவும், வேறு பணியை தேடிக் கொள்ளும் வரை அத்தொகை என்பதை போதாது எனக்கூறி அக்கம்பெனியை முற்றுகையிட்டு சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளான  மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்ட இணை செயலாளர் நரேஷ்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயவேலு,உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கதிர்வேலு, வழக்கறிஞர் கனகசபை, உள்ளிட்டவர்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் அவர்களுடன் விசிக பொறுப்பாளர்கள் கோபிநயினார், வாசு, அபுபக்கர், சிவராஜ், சமூக ஆர்வலர் லோகநாதன் என்டிஇசிஎல். பிரபாகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முக்கங்களை எழுப்பினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here