பொன்னேரி, பிப். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று ஆளுநர்களின் அத்து மீறலை கண்டித்தும், மாநில உரிமை, மற்றும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்தும் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அவ்வார்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டணிக் காட்சிகளைச் சார்ந்த அனைவரும் திரளாக பங்கேற்று பாசிச மோடித் தலைமையிலான பாஜக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினார்கள்.

மேலும் இன்று ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சிபிஎம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்த்து வருகின்றனர்.

அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அண்ணா சிலையின் முன்பாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்டவர்களும், மேலும் கூட்டணி கட்சியினை சார்ந்த பல்வேறு பொறுப்புகள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் அந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று பாஜக அரசை கண்டித்து உரத்த முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் உரை நிகழ்த்தியவர்கள் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்தும், மாநில உரிமை, கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் மேலும் கடந்த பத்தாண்டுகளாக மக்களுக்கும் மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமாக எவ்வாறெல்லாம் மோடித் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்பதை பொதுமக்கள் முன்பு எடுத்துரைத்தனர்.

மேலும் எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உரிய நிதியை ஒதுக்க மறுப்பதையும் மக்களுக்கு நினைவுப்படுத்தினர்.

வெகுச்சிறப்பாக சிபிஎம் சார்பில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட திரளான பொது மக்களும் பங்கேற்று முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here