சென்னை:
கன்னியாகுமரியை சேர்ந்த 3 மீனவர்கள் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஈரான் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 3 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.