பூண்டி, மார்ச். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும்  போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு  கழிவறை கட்டிடம்  கட்டப்பட்டு அதன் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சீத்தஞ்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேணுகா மற்றும் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அசோகன் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். சீத்தஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சரசுபூபாலன் போந்தவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக அவ்விழாவில் பங்கேற்ற ஸ்ரீ சாய் தர்ஷன் டிரஸ்ட்டின் நிர்வாகிகள் ஸ்ரீபாதா சிவகுமார்  சுவாமிநாதன் பரமேஸ்வரன் சமூக சேவகர், களப்பணியாளர் கண்ணன் திவ்யா மற்றும் பென்னாலூர் பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பு கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் பூண்டி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க செயலாளருமான வழக்கறிஞர் R.தில்லைகுமார்.MA.BL. மற்றும் ஊராட்சி செயலர்கள் தனசேகர், லோகநாதன்  மற்றும் இரண்டு பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் என திரளானவர்கள் அவ்விழாவில் பங்கேற்று விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here