ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நேற்று காலை பட்டபிராம் பகுதியில் மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி, திருமண மண்டபம், உணவகங்கள் மற்றும் அடுக்கு தனி குடியிருப்புக்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான குழு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டது.
ஆவடி; அக்.18-
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருவதாகவும்,மற்றும் பல்வேறு கட்ட்டங்களில் சுகாதாரமற்ற மற்றும் தேங்கி நிற்கும் நீரினால் இப்பெருக்கம் நடை பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் இணை இயக்குனர் தலைமையிலான சுமார் 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணி ஊழியர்கள் அளவிலான குழு நேற்று அப்பகுதிகளில் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதில் கக்கன்ஜி நகர் அரசு பள்ளியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், தலைமையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒட்டு மொத்த டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், டெங்கு தடுப்பு பணியாளர்கள், 322பேர், மற்றும் ஆவடி மாநகராட்சி கணக்கெடுப்பாளர் 12 பேர் துப்புரவு தொழிலாளர் மேற்பார்வையாளர் 12 இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று புகை அடிக்கும் இயந்திரம் 12 மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று புகை அடிக்கும் கனரக இயந்திரம் 6 மற்றும் நகராட்சி ஊழியர்களும் மருத்துவ குழுவினரும் இவ்வாய்வு பணியில் ஈடுப்பட்டனர். அப்பகுதி வீதி மற்றும் வீடுகளில் கொசுப் புழுக்கள் பெருக்கம் நடைப்பெறாமல் தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப் பட்டன.
மேலும் வீட்டிற்குள் இருக்கும் பொது மக்களுக்கு டெங்கு குறித்து மாநகராட்சி நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு இல்லாத கட்டட உரிமையாளர்களுக்கு அபராத விதிப்பு எச்சரிக்கையும், விழிப்புணர்வு செய்திகளையும் இரண்டு வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்தனர்.
டெங்கு கொசுப்புழு உருவாகும் தேங்காய் மட்டை பழைய டயர் தேங்காய் ஓடு, மாவு ஆட்டும் உரல், உணவு குளிரூட்டும் சாதனங்களில் பின் தேங்கி இருக்கும் நீர். மற்றும் பழைய பிளாஸ்டிக் டப்பாக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் உடைந்த தண்ணீர் தொட்டி இவைகள் வீட்டில் தேவையற்று அகற்றப்படாமல் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
இவ்வாய்வுகள் கக்கன்ஜி நகர், சாஸ்திரி நகர், பாபு நகர், உழைப்பாளர் நகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், பகுதிகளில் நடைப்பெற்றது. மேலும், மழைக் காலம் முடியும் வரை இப்பகுதியில் மருத்துவ குழுவினரும், மருத்துவ முகாம் செயல்படும் என தெரிவித்தனர்.
இவ்வாய்வில் மருத்துவர்கள் மரு. ராஜேந்திரன் மரு. பனிமலர், மரு. சுமதி ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கொண்ட நபர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவல்களை சேகரித்தனர். காய்ச்சலில் உள்ளவர்கள் மருந்து கடைகளில் தனக்கு தானே மருந்து மாத்திரை வாங்கி அருந்துவதை தவிர்த்து அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ வசதிகளை பெற்றிடும் படி அப்பகுதி மக்களிடம் அறிவுறுத்தினர்.
மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கட்டடங்களில் பயன்பாட்டில் இல்லா தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனை அகற்றிட அறிவுறுத்தியும், மீறுபவர்கள் மீது அபராத நடவடிக்கைகளில் மாநகாரட்சி ஈடுபடும் என்பதையும் எச்சரித்து வாய்மொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந் நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் மோகன், பொறியாளர் வைத்தியலிங்கம், துணைப் பொறி யாளர் சத்தியசீலன், மற்றும் சங்கர் சுகாதார ஆய்வாளர்கள் ஜாபர் ஏழாவது வார்டு பிரகாஷ் தண்டுரை பகுதி சுகாதாரஆய்வாளர் பிரகாஷ் மற்றும் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
ஆவடி ராஜன் செய்தியாளர்