ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் தலைமையில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ராமநாதபுரம் அதிமுக., சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் நடந்தது.
விழாவில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் செ. முருகேசன் தலைமை வகித்து ஜெயலலிதா படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கினார். நகராட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, சட்டசபை தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சி சுரேஷ், நகர் துணை செயலாளர் ஆரிப் ராஜா, நகர் பொருளாளர் ஜெயக்குமார், அரசு வழக்கறிஞர் கருணாகரன், நகர் கூட்டுறவு வங்கி துனை தலைவர் ஆடிட்டர் லோகநாதன்,
நகர் ஜெ., பேரவை செயலாளர் முத்து பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் வீரபாண்டியன், புவனேஸ்வரி, நாகஜோதி, வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.