தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையில் திடீரென வீசிய சூறாவளி காற்று, பூமியிலிருந்து வெடித்து கிளம்பிய நீரூற்றுப் போல் அங்கு கிளம்பிய மணல் சுழற்சி அதனைப் பார்த்தவர்களுக்கு வியக்கத்தகும் வகையில் காட்சியளித்தது..
மேலும் அதுப் பல அடி உயரத்திற்கு எழும்பிய மண் ஊற்று காண்போரை பரவசம் அடைய வைத்தது. அக் காட்சிக்குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகப் பரவி வருகிறது.
தஞ்சையில் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் கடுமையாகி வெப்ப அலை வீசி வருகிறது. இந் நிலையில் தஞ்சையில் திடீரென சூறாவளி காற்று வீசியது அதில் தஞ்சை ஐடிஐ மைதானத்தில் பூமியிலிருந்து மண் வெடித்து கிளம்பியது போல மண் பல அடி உயரத்திற்கு எழும்பி நின்றது.
திடீரென தோன்றிய அக்காட்சி அதனைப் பார்த்தவர்களை மிகுந்த பரவச நிலைக்கு கொண்டு சென்றதென்றேக் கூறலாம். அக் காட்சிக்குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.





















