திருவாரூர், பிப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ..

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் திருக்கராவாசலில் முன்னாள் முதலமைச்சர் ஜெய ல்லிதாவின் 76 வது பிந்தநாள் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் பி. கே .யு . மணிகண்டன் தலைமையில் நடைபெற்து. அந் நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் தமிழ்நாடு மன்றத்திற்கு இப்போது தேர்தல் வைத்தாலும் எடப்பாடியார்தான் முதலமைச்சர் ஆவார் என பொதுமக்கள் கூறி வருகின்றனர். என்றார் மேலும் தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த 520 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. எனவும், மேலும் எப்போது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம் என மக்கள் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியிலிருந்து ஏராளமானோர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக திருக்கரவாசலில் 64 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை மாவட்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் ஏற்றி வைத்து புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, திருவாரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here