புவனகிரி, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார்
கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பில் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்திரவாதம் என்ற தலைப்பில் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி பெட்டியில் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக பட்டியலணி மாநில தலைவர் தடா பெரியசாமி, சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி டெல்லியில் பாஜகவில் இணைந்த புவனகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி எஸ் அருள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெட்டியில் தங்கள் குறைகளை அடங்கிய கோரிக்கை மனுக்களை போட்டனர்.
அப்பொழுது சத்யராஜ் என்கிற மாற்றுத்திறனாளி உணர்ச்சிப் பொங்க கையெடுத்து கும்பிட்டு கோரிக்கைகளை பெட்டியில் போட்டார். அவருக்கு கட்சி சார்பாக மாவட்ட தலைவர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.. அப்பொழுது மாற்றுத்திறனாளி சத்யராஜ் மோடி வாழ்க அவர்தான் என் உயிர் அவர் இல்லை என்றால் நான் இல்லை அவரால்தான் நான் இருக்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்து முழக்கமிட்டார்.
பின்னர் சத்யராஜ் கூறுகையில் மோடியால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மோடி ஐயா சொன்ன பிறகுதான் மோடி சிலிண்டரை வாங்கினேன். அவர் நல்லா இருக்க வேண்டும் நல்லா இருக்க வேண்டும் என்று பேசினார்.





















