புவனகிரி, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார்
கடலூர் மாவட்டம், புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அன்பகம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் புவனகிரி ரோட்டரி சங்க தலைவர் சேஷாத்திரி, செயலாளர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு சுவையான காலை உணவு வழங்கப்பட்டது.
மேலும் அச்சிறப்பு மிகுந்த அந் நிகழ்விற்கு விருந்தினர்களாக முன்னாள் துணை நிலை ஆளுநர் கமல்சந்த், ஆர்.வி.பி. மருத்துவர் கதிரவன் முன்னாள் ரோட்டரி தலைவர் ஹபீப் ரகுமான் உள்ளிட்ட பலர் வருகைத் தந்தனர்..




















