பொன்னேரி, ஆக. 12 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். பொன்னேரி மதுவிலக்கு அமுல் பிரிவு தாசில்தார் சங்கிலி ரதி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வருவாய் கோட்ட அலுவலக ஊழியர்கள், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் ,நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன், மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது முழுமையான பங்களிப்பை தருவேன், போதை பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன். என்றவாறு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இச்சிறப்புமிகு சமுதாய மேன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக இலக்கை வகுத்து, பொதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்பதனை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்த இந்நிகழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.





















