மயிலாடுதுறை, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
நல்ல ஷூ, சாப்பாடு இல்லை மேலும் படிப்பிற்கும் எனக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறினேன் எனக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜ் பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா நேற்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா தலைமையில் நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் இந்திய வேக பந்துவீச்சாளர் நட்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கேற்றி விழவினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய இந்தியகிரிக்கெட் வேகப் பந்து வீச்சாளர் நட்ராஜ், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவ மாணவியர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு விளையாட்டுத் துறையில் ஊக்கம் பெற வேண்டும் எனவும், மேலும் விளைநாட்டில் கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும் என்றார்.
நீங்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் எனவும் 20 வயதிலிருந்தே லட்சியத்துடனே பயணித்தால் 30 வயதில் அவ்விலக்கை அடைய முடியும் என்றார்.
தொடர்ந்து லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்ற அவர் தன்னை மேல் குறியிட்டு சொல்லும்போது நானெல்லம் படிக்கும் போது எனக்கு நல்லா ஷூ கிடையாது, சாப்பாடு கிடையாது, மேலும் எனதுப் பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறி இவ்விடத்தை அடைந்துள்ளேன் என்றார்.
அதையும் மீறி நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது இவ்வளவு வயதான பின்னும் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறாயே என்று பேசினார்கள்.
இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள் இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம் உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என அப்போது அறிவுறுத்தினார்.
ஆனால் இப்பொழுது நகரங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கையில் செல்போன்கள் வைத்து வீணாக விளையாடி நேரத்தை வீண்டிக்கிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க குறைந்தப் பட்சம் நல்ல காற்றில் நடைப் பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அனைத்து விளையாட்டுகளும் அவசியம் அதைவிட படிப்பும் அவசியம் ஆனால் படிப்பிற்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்ற அவர் அதனால் படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்று மனம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
அதனால் இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன் அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால்தான் முன்னேற முடிகிறது. அதனால் கடின உழைப்பு மற்றும் படிப்பு ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம் என்றார். குறிப்பாக கல்வியை யாரும் தவற விட்டுவிடாதீர்கள் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும் தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்று விரிவான தன்னிலையோடு ஒப்பிட்டு பல்வேறு கருத்துக்களை மாணவ மாணவிகளோடு அவ்வுரையின் வாயிலாக பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் முடிவில் இந்திய கிரிக்கெட் வீரர் நட்ராஜ் உடன் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.





















