திருவாரூர், ஜூன். 21 –
திருவாரூரில் இன்று லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் உரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் …
திமுக ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் கூடவே வரும் எனவும், மேலும் தற்போது 52% மின் கட்டனம் உயர்வு, மற்றும் குடிநீர் வரி வீட்டு வரி, உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அப்போது தெரிவித்தார்.
மேலும் அதனை கண்டிக்கும் வகையிலும், லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அப்போது அவர் உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பி கே யு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்டவர்களும் திரளான அக்கட்சி தொண்டர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

























