திருவள்ளூர், பிப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினரின் அராஜகம் குறித்து மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில்  திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஆர்.எம். தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மூத்த தலைவர் சதா பாஸ்கரன், மாவட்ட பொருளா்ளர் எம்.சிவக்குமார்  மாவட்ட துணை தலைவர்கள் வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், ஜி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது செய்தியாளர்களிட் பேசிய மாநில துணை தலைவர் கே.ஆர்.அன்பழகன், கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுப்பதாகவும், படகை உடைத்து நாசப்படுத்தி பல லட்சம் பாதிப்பை   ஏற்படுத்துவதாகவும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

 

மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் சிறப்பாக செயல் பட்டதாகும்  மருத்துவக் கல்லூரி அமைத்தது,   பழவேற்காடு முகத்துவாரம் அமைத்தது மற்றும்  ரயில்வே சுரங்கப்பாதை  குடிநீர்,  சாலை வசதி, உயர்கோபுர மின்விளக்கு ஆகியவற்றிற்காக தொகுதி முழுவதும் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் எனவே காங்கிரஸ் கட்சி சார்பில்  மீண்டும் போட்டியிட வாய்பபு கிடைக்கும் என  தெரிவித்தார்.

 

மேலும்  கடந்த தேர்தலில் 3.50 லட்சத்திற்கும் மேலாக வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதால், இந்த முறை அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட மூத்த தலைவர் சதா பாஸ்கரன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 4 மாதமாக தினக்கூலி  வழங்காமல், தமிழக அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பாஜக அரசு நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் தீபன் லாரன்ஸ். வட்டாரத் தலைவர்கள் பி.பொன்ராஜ், பி.தேவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் நித்தியானந்தம், கே.வி.ராஜன்,  எம்.சந்திரசேகரன், பி.சுரேஷ்,  முருகசன் , ஈக்காடு அர்னால்டு,  சி.ரவி உள்பட திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here