தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது மகன் சிலம்பரன் மற்றும் தணிகை என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தம்பதியினருக்கு தியாசினி (வயது 9)) என்ற ஒரு மகள் உள்ளார்.
குடும்பத்தின் வறுமையின் காரணமாகவும், மேலும் வீட்டின் பல்வேறு முக்கிய செலவுகளுக்காக வாங்கிய கடனை அடைக்கும் போருட்டு, மேலும் சிலம்பரசன் கடன் பெற்றுள்ளார். மேலும் உள்ளூரில் சரியான வேலைக் கிடைக்காமல் இருந்த நிலையில் கடனை அடைப்பதற்காக அவர் கடந்த 12.2.2024 அன்று பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
மேலும் அந்நாட்டின் தட்பவெப்ப நிலை காரணமாக அவர் உடல் ஒத்துழைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி காரணமாக 25-2-2024 அன்று இறந்ததாக பிரான்ஸ் நாட்டில் உள்ள அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவரது மனைவி தணிகை தனது கணவரின் உடலை எப்படியாவது தமது சொந்த ஊரான தளிக்கோட்டை கிராமத்திற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.