செங்கல்பட்டு, சனவரி. 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள எஸ். அருண்ராஜ் தெரிவிக்கும்போது ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என புதிய ஆட்சியர் அப்போதுத் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக எஸ். அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக எஸ். அருண்ராஜ் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவேற்றுக்கொண்டார். புதிய மாவட்டம் உருவாக்கியதில் இருந்து மூன்றாவது ஆட்சியராக பதவி ஏற்றுள்ள எஸ். அருண் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தாலும், செங்கல்பட்டு ஏற்கனவே மாவட்ட அந்தஸ்து பெற்ற மாவட்டமாக இருந்தது.

மேலும் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாகவும் செங்கல்பட்டு மாவட்டம் விளங்குகிறது. ஏரிகள் நிறைந்த மாவட்டமாகவும் செங்கல்பட்டு உள்ளதாக தெரிவித்த ஆட்சியர். காஞ்சிபுரம் – செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும் பொழுது, நான் பயிற்சி ஆட்சியராக இங்கு தான் பணியாற்றினேன். எனவும் என்னுடைய பணி தொடங்கியதே, இம் மாவட்டத்தில் தான் எனவே இம் மாவட்டத்தை பற்றி எனக்கு  நன்கு தெரியும் எனத் தெரிவித்தவர்.

இருப்பினும் இந்த மாவட்டம் குறித்து பல்வேறு நிலைகளை ஆராய்ந்து குறிப்பாக மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும், ஒரு சில பிரச்சினைகளில் அரசு வழி முறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலை இருந்தால் அவை வேகமாக பின்பற்றப்பட்டு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.

முன்னதாக புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ் க்கு மாவட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட அனைவரும் அவரது பணிச் சிறக்க தங்கள் வாழ்த்துகளை அவருடன் பகிர்ந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here