திருவள்ளூர், ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..

திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதத்தில் தேர்தல் ஆணைய உத்தரவின் பெயரில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

அதனை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே  தேர்தல் கண்காணிப்பு குழு  பிரவீன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த வேனை மடக்கி சோதனை செய்த போது சென்னையில் உள்ள தனியார் (லலிதா ஜுவல்லர்ஸ் ) நகைக்கடையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கடைக்கு கொண்டு சென்றதும் அந்த கடைக்கு தேவையான நகைகளை கொடுத்து விட்டு மீதமுள்ள நகைகளை ஆந்திராவில் இருந்து ஒரு வேனில் சென்னை லலிதா ஜூவல்லரிசுக்கு கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

இதனால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மற்றும் வாசுதேவன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் ஒரு மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் அதில் கிட்டத்தட்ட ரூ.1.25 கோடி மதிப்புள்ள 2.15 கிலோ  தங்கம் இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் நகையை கொண்டு வந்ததால் அந்த நகைகள் அனைத்தையும் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here