விருதுநகர்:
சிவகாசி ஞானகிரி சாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், டிபார்ட் மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது48).
இவர் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரனேசன் பூங்கா பகுதியில் அவரது வாகனத்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் ஒருவன் வந்தான்.
அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் காளீஸ்வரியின் கழுத்தில் கிடந்த 18 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னலாய் மறைந்து விட்டான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி போலீசில் புகார் செய்தார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

















