திருவாரூர், ஏப். 11 –
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றித்திற்குட்பட்ட எருக்காட்டூர் ஊராட்சி மற்றும் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓ.என்.ஜி சி சமுக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 16.16 இலட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைப்பெற்றது.
மேலும் அதன்படி, ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 4.53 இலட்சம் மதிப்பில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட எருக்காட்டூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும், மேலும், எருக்காட்டூர் ஊராட்சியில் உள்ள கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் ரூ. 2.5 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும் கொரடாச்சேரி ஒன்றிய துனை பெருந்தலைவர் பாலசந்தர் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் ரவி, ஓ.என்.ஜி.சி பொதுமேலாளர் சரவணன், துணை பொதுமேலாளர் வேணுகோபால், சமுக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி சந்திரசேகர், மேலும் அப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியை புவனா, ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், எருக்காட்டூர் ஊராட்சி துனைத்தலைவர் கீதா சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலம் என்.ஜி.ஓ. செந்தில்குமார், கேயார்டிஸ் என்.ஜி.ஓ.கோவிந்தராஜன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டவர்களும் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என திரளானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

























