திருவாரூர், ஆக. 30 –
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் புதிய பூணூலை வேத மந்திரங்கள் முழங்க மார்ப்பில் அனுவித்துக் கொண்டனர். தொடர்ந்து ஏற்கனவே அணிந்திருந்த பழைய பூணூலை வேதமந்திரங்களை சொல்லி அகற்றினர்.
அதுப் போன்று தச்சர், பொற்கொல்லர், நாயுடு முதலான பல்வேறு சமூகத்தினர் பூணூ;ல் அணியும் வழக்கத்தை உடையவர்கள் ஆவணி அவிட்ட நாளான இன்று புதிய பூணூல் அணிந்து ஆவணி அவிட்டத்தை அவர்கள் அனுசரித்தனர்.























