வலங்கைமான், மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …

“வலங்கைமான் அருகே குறைவான மின்னழுத்த மின்சாரம்..  குடிதண்ணீர் கூட  பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல்… மின்சார சாதன பொருட்கள் பழுது..”பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது ரெகுநாதபுரம் ஊராட்சி. அவ்வூராட்சியில்  உள்ள இருகரை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு..  தஞ்சாவூர் மாவட்டம் மகிமாலை என்ற கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றிலியிருந்து மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் வரக்கூடிய மின்சாரம் குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் என்பதால் அந்த மின்சாரத்தை வைத்துக்கொண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குடிதண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க முடியாத சூழல் நிலவி வருவதாகவும், மேலும் வீட்டில் உள்ள மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி  உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இந்த குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தால் அடிக்கடி பழுதடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்..

மேலும், குடிதண்ணீர் கிடைக்காத இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வயல்வெளிகளில் இயங்கக்கூடிய ஆழ்குழாய் கிணறு மோட்டார்களில் இருந்து தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.. மேலும் அடி பம்பில் சில இடங்களில் தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.. மேலும் குறைந்த மின்னழுத்தம் மின்சாரம் வருவதால் தெருவிளக்குகள் கூட சரியாக எரியவில்லை எனவும் பொது மக்கள் வேதனை தெரிவித்தார்கள்…

குடிதண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்க கூட சரியான மின்சாரத்தை வழங்காத அம்மாபேட்டை துணை மின் நிலைய அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தார்கள்.

மேலும் இருகரை கிராமத்திற்கு தனியாக மின்மாற்றி வைத்து எங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டும்.. என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here