திருவாரூர், பிப். 04 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அப்பகுதி விவசாயிகளுக்கு அப்போது ஆறுதல் கூறினார்.

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பெய்த கன மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா தாளடி நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. தற்பொழுது அறுவடை செய்யும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையினால் வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே செல்லூர் பகுதியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அப்போது அவர் “பருவம் தவறி பெய்த  மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கண்டு விவசாயிகள் கதறுகிறார்கள். எனவும், உடனடியாக முதலமைச்சர் அழிவை நேரடியாக பார்வையிட வேண்டும். எனவும், விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 35 ஆயிரம் ரூபாயும், எல்லா கிராமங்களிலும் புதிய அறுவடை அறிக்கையை ஆய்வு மேற்கொண்டு, 100 சதவீதம் இழப்பீடு கிடைப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். எனவும்,

மேலும், வெளிப்படையாக போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வின் போது அப்பகுதி விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

 

பேட்டி: பி. ஆர். பாண்டியன்,

(அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here