சென்னையில் வரும் 18 ஆம் தேதி தனியார்துறை வேலைவாப்பு முகாம் நடைப்பெற உள்ளதாக வேலை வாய்ப்புத் துறை இயக்குனர் மற்றும் அதன் முதன்மைச் செயலர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
மாநில தொழில் நெறி வழிகாட்டும் னமயத்தின் மூலம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை கீழ்காணும் முகவரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A– 28, முதல் தளம், டான்சி கார்ப்பேரேட் வளாகம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600 032. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை மீலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திட இம்முகாம் நடத்தப் படுகிறது. இவ் வேலைவாய்ப்பு முகாமில், 25 – க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துக் கொள்ள உள்ளன.
பட்டயபடிப்பு, பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு,துணை மருத்துவ படிப்பு, ஐ.டி.ஐ, மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள 21 வயது 40 வயது வரை உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.
வேலை நாடுபவர்கள் தங்பள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுய விவர குறிப்புடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்க கொள்ளப் படுகிறது. முகாமில் கலந்துக் கொள்வதற்கு முன் பதிவு அவசியமில்லை, இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 044 – 22500134 எண்ணினை தொடர்புக் கொள்ளலாம்.