கும்பகோணம், ஏப். 10

தமிழகம் முழுவதும் கடந்த 11 மாத கால திமுக ஆட்சியில், இதுவரை நடத்தப்பட்ட 55 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுமார் 68 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளனர் என்றும், இன்னும் இரு மாதங்களில் இது ஒரு லட்சமாக அதிகரிக்கும் என்றும், இன்று கும்பகோணம் அருகே திருமங்கலக்குடி அஸ்லாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 56வது வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும் இன்று நடைப்பற்ற இந்த முகாமில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவார்கள் என்றும், கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகள் இயங்காத நிலையில், மாணவர்களிடையிலான கற்றல் இடைவெளியால் கல்வி கற்றல் மட்டுமல்லாது பொது அறிவை மேம்படுத்தலும் இடர் ஏற்பட்டது அதனை சீரமைக்கவே, இல்லம் தோறும் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆறு மாதங்களுக்கு என கொண்டு வரப்பட்ட இத்திட்டம் தற்போது மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு தங்களது கற்பித்தல் திறனை மேம்படுத்திட ஆண்டிற்கு சுமார் 25 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. அது தொடரும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்விற்கான சிலபஸ் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே தேர்வில் கேள்வி கேட்கப்படும் என்றும், கல்வித்துறை தொடர்பான மேலும் பல அறிவிப்புகள் நாளை வெளிவரும் என்றும் கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் தெரிவித்தார்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடி  அஸ்லாம் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி வி கணேசன் தலைமையிலும், அரசு கொறாடா கோவி செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்,

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த 11 மாத காலத்தில், மாநில அளவில் நடைபெறும் 56வது மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமாகும், இதில் 181 நிறுவனங்கள் பங்கு கொண்டு 5ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டம், பட்டமேற்படிப்பு, மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது பல அண்டை மாவட்டங்களை சார்ந்த ஏராளமானோர் உட்பட சுமார் 10 ஆயிரம் மாணவ மாணவியர்கள் இம்முகாமில் பங்கேற்றுள்ளனர் முகாம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணை விழா மேடையிலேயே வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் உட்பட ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகளும், பெற்றோர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here