காஞ்சிபுரம், செப். 06 –
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சங்கர் கண் வங்கி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலியை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவனையை சேர்ந்த சங்கரன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனை கண்காணிப்பாளர் கல்பனா, உள்ளிட்டோர் பங்கேற்று இந்த மனித சங்கிலி மற்றும் கண்தானம் விழிப்புணரவை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்
இந்த மனித சங்கிலி விழிப்புணர்வில் பயிற்சி செவிலியர்கள், செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண்தானம் மனித சங்ஙிலி பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.