திருவாரூர், செப். 05 –
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதிதிட்டத்தின் கீழ் “புதுமைப் பெண் திட்டம்” மூலம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 588 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை), உயர்கல்வி வழிகாட்டு கையேடு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்கள்.
தமிழக முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதிதிட்டத்தின் கீழ் “புதுமைப் பெண் திட்டம்” மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று (05.09.2022) திஇராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதிதிட்டத்தின் கீழ் “புதுமைப் பெண் திட்டம்” மூலம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் 588 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை), உயர்கல்வி வழிகாட்டு கையேடு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்கள்.