பட்டுக்கோட்டை, மே. 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூர் மாவட்டம்,

பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முனியம்மாள் வீட்டில்  பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை  11 கிலோ இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கஞ்சாவை பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் பறிமுதல் செய்து பாரதிநகர் பகுதியை சேர்ந்த முனியம்மாள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here