கும்பகோணம், ஆக. 16 –
கும்பகோணத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் காந்தி பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி வழங்காததை கண்டித்தும், மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தாவை ரூ.350 லிருந்து ரூ.497 ஆக உயர்த்தியதை கண்டித்தும், “80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் உயர்த்தி வழங்காததை கண்டித்தும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட கோரியும், புதிய ஓய்வூதியம் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யகோரியும், குடும்ப பாதுகாப்பு சந்தாவை ரூ. 80 லிருந்து 150 ஆக உயர்த்தியதை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு செய்திட வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ருத்ராபதி தலைமை வகித்தார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் வட்ட கிளை செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராமநாதன், பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ஐயப்பன், வட்ட கிளை செயலாளர் சந்தானம் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாநில துணைத்தலைவர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.