காஞ்சிபுரம், அக். 18 –
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார்
மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள உயர் அலுவலர்களிடமும், மாணவர்களிடமும் பேசினார். மேலும் தொழிற்பயிற்சி நிலையத்தில் மரகன்றுகளை நட்டு வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கணேசன், தமிழக முதல்வர் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தில் உள்ள 90 அரசு தொழிற் பயிற்ச்சி நிலையத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.
தொழிற் பயிற்சி மையங்களில் நேரடியாக 90 தொழிற் பயிற்சி நிலையங்களில் தேவையான கூடுதல் கட்டிடம், பழைய கட்டிடங்களை பழுது பார்த்தல், மேஜை, நாற்காலி என அனைத்து வசதிகளை செய்து தருவதற்காக ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 90 தொழிற் பயிற்சி நிலையங்களில் இதுவரை 8 தொழிற் பயிற்சி நிலையங்களை ஆய்வு மேற் கொண்டுள்ளேன். மீதமுள்ள 82 தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.