திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட் காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சியானது நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி கல்வெட்ட்னைத் திறந்து வைத்து சாலையின் தரத்தினை பார்வையிட்டார்.
மேலும் அந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் நகர உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.





















