கும்பகோணம்,மார்ச். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் படவுள்ள நிலையில்,  மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர்,  குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நேற்று அமல் படுத்தியுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சி.ஏ.ஏ. அமல் படுத்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும்,  அரசியல் தலைவர்களும், சமூக நல அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன.  அந்த வகையில், இந்திய மாணவர் சங்கம் கிளை செயலாளர் கோபிநாத், தலைமையில் அரசு கலைக் கல்லூரி முன்பு நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் பிரதாப், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here