பொன்னேரி, ஜூலை. 24 –

தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி நகரத் தலைவர் மோகன், மீஞ்சூர் ஒன்றிய தலைவர்கள் அன்பு, கோவிந்தராஜன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சோமுராஜசேகர், மாநில நிர்வாகி குமார், அனுப்பம்பட்டு பாலன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆமூர் நாகமணி உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்புத்துறை தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு, தமிழக அரசால் ஏற்றப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு சாதாரண மற்றும் நடுத்தர பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்ற வகையில் அமைந்துள்ளது. எனவும் மேலும், நிலக்கரி கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும். மத்திய அரசிடம் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தினை வாங்காமல் தனியாரிடம் அதிக விலையில் வாங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் வினோத்குமார், ஆதிகேசவன், பொன்பிரகாஷ், பிறமாநில மொழி தலைவர் பிரகாஷ்சர்மா, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் வருணன், உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here