கும்பகோணம், ஏப். 24 –

இசைஞானி இளையராஜாவைப் தரக்குறைவாக ஜாதிய வன்மத்துடன் பேசியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது கொடும்பாவி எரிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கும்பகோணம் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர்  ராம்நகர் குருமூர்த்தி தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளனர்.

அதில் கடந்த 19 ஆம் தேதி  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் இசைஞானி இளையராஜாவை காசு இல்லாத போது கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்திலும் காசு பணம் வந்ததும் உயர்ந்த ஜாதி போல் நடந்து கொள்வதும் என்று ஜாதிய வன்மத்துடன் இழிவாக பேசியதை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த குருமூர்த்தி ஜாதி மதம் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுபோன்று ஜாதி வன்மத்துடன் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here