கும்பகோணம், மே. 03 –

கும்பகோணத்தில் உள்ள பழைய பாலக்கரை பகுதி மிகவும் கூட்ட நெரிசல் மிகுந்தப் பகுதியாகும். இங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் பல்வேறு நெருக்கடிகளையு அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருக்கும் ராபர்ட் என்பவர் நேற்று மாலை பழைய பாலக்கரையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அவரது நடவடிக்கை இருந்ததை பார்த்த அங்கு பணியில் இருந்த துர்கா என்ற பெண் காவலர் பல முறை அங்கிருந்து கடந்துச் செல்ல எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், வழக்கறிஞர் ராபர்ட் தனது சட்டை பட்டன்களை கழட்டியவாரு பணியில் இருந்த பெண்காவலரிடம் தவறான வார்த்தைகளால் பேசி அவரை மேலும் பணியில் கவனம் செலுத்த விடாதவாறு, எரிச்சலூட்டும் வகையில் நடந்துக் கொண்டார் என கூறப்படுகிறது. இந்த காட்சி சமூக வளைதலங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பெண் காவலர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here