நாமக்கல், ஜூலை. 20 –
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள முசிறி துணை மின் நிலையத்தில் எதிர் வரும் ஜூலை 22 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சப்பளை நிறுத்தி வைக்கப்படுவதாக மின்சார வாரியத்தின் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அன்றையத்தினத்தில் அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னக்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய்க்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், புல்புடுங்கிபாளையம், புத்தூர், வேப்பமரத்தூர், மணிகட்டிபுதூர், கலக்கம்பாளையம், சிங்கலிபட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம், கப்பநாயக்கனூர் பகுதிகளில் மின்சப்பளை நிறுத்தி வைக்கபடுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றைய நாளில் மின் தடையின் காரணமாக தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை முந் நாளில் திட்டமிட்டு மாவு ஆட்டுதல், துணி துவைத்தல் மற்றும் மேல் நிலை நீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றுதல், போன்ற முக்கிய பணிகளை செய்துக் கொண்டு தங்கள் சிரமங்களை தவிர்திடும்படி இவ்வறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






















