கும்பகோணம், பிப். 26 –

பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் கடந்த 21ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

அதன் 6 வது நாள் பரப்புரை பயணம் கடலங்குடி தெருவில் நடைப் பெற்றது. அப் பரப்பரை பொதுக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். ராமதாஸ் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

மேலும் அந்நிகழ்ச்சியில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி புலவர்கள் ராகவன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இப்பரப்புரையில் மருத்துவர் ராமதாஸ் உரை நிகழ்த்தும் போது, இந்த நகருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. ஆனாலும் இங்கும் தமிழ் இல்லை. எங்கும் தமிழ் இல்லை, அதனால்தான் என் பயணம் தொடர்கிறது. தமிழ் அன்னையை யாரேனும் கண்டுபிடித்தால் 5 கோடி தருகிறேன். என்னிடம் பணம் இல்லை, என் தலையை அடகு வைத்தாவது தருகிறேன்.

அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என பலகை உள்ளது, தமிழ்தான் இல்லை. இன்றைக்கு தமிழ் வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் எனது பயணம் தொடங்கியுள்ளது. என்றவாறும் மேலும் தமிழ் அன்னையை மீட்டெடுப்போம் என்றவாறும் மருத்துவர் ராமதாஸ் பரப்புரை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜோதி ராஜ் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம க ஸ்டாலின் விவசாய சங்க  பொறுப்பாளர் கண்ணன் பட்டிமன்ற பேச்சாளர் பன்னீர்செல்வம் பானுமதி சத்யமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here