செம்மஞ்சேரி, ஏப். 24 –
சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன், மாவட்ட பொருளாளர் அ.செல்வம், மாவட்ட துணை தலைவர் ஆதி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சமூக சேவகர் செம்மை அ.தனசேகர், கே.பி.கதிரவன் வரவேற்புறை நிகழ்த்தினார்கள்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் சபாநாயகர், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் தொண்டர்களிடம் உறையாற்றிய அவர் தென்சென்னை மாவட்ட புதிய பொருப்பாளர்களை நியாமனம் செய்தார். உடன் மாநில பொதுச்செயலாளர் வா.பிரபு, மாநில தொழிற்சங்க செயலாளர் டி.இருதயநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.



















